ஷாருக்கான் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்புக்கு மத்தியில், உருவாகியுள்ள 'ஜவான்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனராக மாறியவர் அட்லீ. இவர் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா, ஆகியோர் நடித்து வெளியான 'ராஜா ராணி' திரைப்படம்... மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம், படத்தின் சாயலில் இருப்பதாக சர்ச்சைக்குள் சிக்கினாலும், வசூலில் கெத்து காட்டியது. மேலும் இப்படத்தின் மூலம் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர், கம்பேக் கொடுத்த நயன்தாராவிற்கும், மிகப்பெரிய திருப்புமுனையை அமைந்தது.
26
இதைத்தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைத்த அட்லி, அடுத்தடுத்து அவரை வைத்து தெறி, மெர்சல், பிகில், என ஹார்டிக் வெற்றியை கொடுத்தார். எனினும் இந்த படங்களும் ஒரு சில காப்பி சர்ச்சைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் போன்ற பெரிய நடிகரை இயக்கிவிட்டு, அடுத்ததாக அட்லீ யாரை வைத்து படம் இயக்குவார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில், திடீரென பாலிவுட் திரை உலக்கையின் பக்கம் சாய்ந்தார் அட்லீ. ஷாருக்கானை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், ஷாருக்கான் பதான் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வந்தால் ஜவான் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றது.
46
ஒரு வழியாக பதான் படத்தை முடித்த கையோடு ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்க துவங்கினார் அட்லீ. மேலும் இந்த படத்தில் தன்னுடைய முதல் படத்தின் அதிர்ஷ்ட தேவதையான நயன்தாராவை செண்டிமெண்டாக இப்படத்தில் கதாநாயகியாக கமிட் செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாகவும் உள்ளது.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'ஜவான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து, தற்போது வரை இப்படம் குறித்து எந்த தகவலையும் பட குழு வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது அதிரடியாக இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
66
மேலும் இப்படம் வெளியாவதற்கு முன்பே, வழக்கம்போல் அட்லீ காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 1985 ஆம் ஆண்டு பாரதிராஜா மற்றும் கமலஹாசன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஒரு கைதியின் டைரி' படத்தின் சாயலில் தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.