தமிழ் திரையுலகில், இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை கடந்து அனைத்து ரசிகர்கள் மனதிலும் ஒரு குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் அதிகம் ரசிக்கப்பட்டவர் மனோபாலா. சமீபத்தில் மாரடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்த நிலையில், கல்லீரல் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டார். இதற்காக வீட்டில் இருந்தபடியே, சிகிச்சை எடுத்து வந்த மனோபாலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்தது.