கடந்த 2010 ஆம் ஆண்டு 'காதலாகி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே.
திருப்புமுனையாக அமைந்த படம்:
இதை தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான மேகா படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
புத்தம் புது காலை:
குறிப்பாக, மேகா படத்தில்... இடம்பெற்ற புத்தம்புது காலை பாடல் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்தது.
அடுத்தடுத்த படங்கள்:
இந்த படத்தை தொடர்ந்து டார்லிங், கத்துக்குட்டி, ஜித்தன் 2, போன்ற தரமான படங்களை பிடித்து நடித்தார் சிருஷ்டி.
சின்னத்திரை என்ட்ரி:
முன்னணி நாயகி லிஸ்டில் இடம்பிடிக்க முடியாததால், அதிரடியாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார்.
பாதியில் வெளியேற்றம்:
மிகவும் சவால்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியில், தாக்குப்பிடிக்க முடியாமல்... ஓரிரு வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
தற்போது இவர் கலந்து கொண்டுள்ள மற்றுமொரு ரியாலிட்டி ஷோ... குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையால் வியக்க வைத்து வருகிறார் சிருஷ்டி.
கைவசம் ஒரே ஒரு படம்:
இவரின் கை வசம் சந்திரமுகி படம் மட்டுமே இருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டதால் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கு கொக்கி போட்டு வருகிறார்.
போட்டோ ஷூட்:
அந்த வகையில், சிருஷ்டி டாங்கே... அவ்வப்போது விதவிதமான உடையில் தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஹாட் லுக்:
மெரூன் கலர் லெஹங்காவில்... மிளிரும் அழகோடு கன்னக்குழி அழகி நகைகளுடன், தங்க மங்கையாக மாறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.