சர்ச்சைகள் மற்றும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், நேற்று மே 5-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவை சேர்ந்த 32-ஆயிரம் பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு, பின்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக சித்தரித்து தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்கள் கட்டாய மதம் மாற்றப்பட்டு பயங்கரவாதப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.