செவ்வந்தி சீரியல் நாயகி திவ்யா ஸ்ரீதருக்கு குழந்தை பிறந்தாச்சு! புகைப்படத்தோடு குட் நியூஸ் சொன்ன நடிகை!

First Published | Apr 8, 2023, 10:28 AM IST

'செவ்வந்தி' சீரியல் நடிகை, கர்ப்பமாக இருந்த நிலையில்... தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். 
 

சன் டிவி-யில் ஒளிபரப்பான, 'கேளடி கண்மணி' சீரியல் மூலம் நாயகியாக அறிமுமானவர் பெங்களூரை சேர்ந்த  திவ்யா ஸ்ரீதர். ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை இவருக்கு திவ்யாவுக்கு இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  இவருக்கும் 'கேளடி கண்மணி' சீரியலில் கதாநாயகனாக நடித்த அர்னவுக்கும் இடையே காதல் தீ பற்றியது. இதை தொடர்ந்து இரண்டு வருடத்திற்கும் மேலாக இருவரும், தனியாக வீடு ஒன்றை வாங்கி லிவிங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகவும், அர்னவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்புகள் இல்லாத போது, அவருக்கான அத்தனை செலவுகளையும் திவ்யா ஸ்ரீதர் தான் பார்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

சூர்யா கீழடி வந்த சீக்ரெட் காரணம் இதுதானாம்? புட்டு புட்டு வச்ச பயில்வான்.. பந்தாடும் ரசிகர்கள்!

Tap to resize

பின்னர் அர்னவ் வீட்டிலும் திவ்யா ஸ்ரீதரை ஏற்றுக்கொண்ட நிலையில், இருவருக்கும் மிகவும் எளிமையான முறையில், இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்த புகைப்படங்களை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமான பின்னரே வெளியிட்டு... தங்களுக்கும் உள்ள உறவு முறை குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இதை தொடர்ந்து ரசிகர்களா பலர் இந்த ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், இவர்களின் திருமண வாழ்க்கையில் புது பிரச்சனை ஏற்பட்டது.

திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரத்திலேயே, அர்னவ் தற்போது நடித்து வரும் செல்லமா சீரியலின் நடித்து வரும் நாயகியோடு தொடர்பு வைத்து கொண்டு தன்னை அடித்து டார்ச்சர் செய்ததாகவும், அவர் மிதித்ததில் தனது கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் இருந்து அழுதபடி வீடியோ வெளியிட்டு, அர்னவ் மீது அடுக்கடுக்கான புகார்களையும் முன்வைத்து இருந்தார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இதை தொடர்ந்து, அர்னவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து போலீஸ்.

வெள்ளித்திரையில் வெற்றிநடை போட்ட 'வாரிசு' உங்கள் இல்ல திரையில்! முழு விவரம் இதோ...

திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் சில நாட்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்தார் அர்னவ். மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார்.

கணவர் அர்னவ்வால் கைவிடப்பட்ட சீரியல் நடிகர் திவ்யா ஸ்ரீதருக்கு, அவருடன் நடித்த சீரியல் பிரபலங்கள் தான் ஆறுதலாக இருந்து வந்தனர். கர்ப்பமாக இருந்த திவ்யாவுக்கு, வளைகாப்பு முதல்கொண்டு செய்து அழகு பார்த்தனர். மேலும், சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில்... குழந்தை பிறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஓய்வு கூட இல்லாமல் சீரியலில் நடித்து வருகிறேன் என திவ்யா ஸ்ரீதர் எமோஷ்னலாக பேசியது, பலரது மனதையும் கலங்க வைத்தது.

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! 42 வயது நடிகை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

இந்நிலையில் தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை மிகவும் மகிழ்ச்சியாக புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார் திவ்யா ஸ்ரீதர். மேலும் மிகவும் உருக்கமாக அவர் கூறியுள்ளதாவது. "இந்த காத்திருப்பு நீண்டது, ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனையற்றது. என்னில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், மேலும் விசித்திரக் கதைகளைப் போல என்றென்றும் உங்களில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன் என் அன்பு தேவதையே! என கூறி தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை உறுதி செய்துள்ளார். 

மேலும் தனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். திவ்யாவுக்கு குழந்தை பிறந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள்.

சைடு போஸில் முதுகு முதல் இடுப்பு வரை மொத்தமாக காட்டிய ரம்யா பாண்டியன்! மொத்த அழகை பார்த்து ஸ்தம்பித்த இன்ஸ்டா!

Latest Videos

click me!