நடிகர் விஜய் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார். இப்படம் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சல் டல்லான விமர்சனங்ளையே பெற்றது.
தமிழில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியான இப்படம் தெலுங்கில் 'வாரசுடு' என்கிற பெயரில் ரிலீஸ் சில நாட்கள் கழித்தே வெளியானது. காரணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான, சிரஞ்சீவி மற்றும் பாலையா நடித்த படங்கள் வெளியானதால், தியேட்டர் பற்றாக்குறை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கிலும் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! 42 வயது நடிகை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
இப்படம் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக, அதிகார பூர்வமாக படக்குழு தெரிவித்தது. விஜய் வாரிசுக்கு எதிராக வெளியான 'துணிவு' திரைப்படமும் இப்படத்திற்கு நிகரான சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வெள்ளித்திரை, ஓடிடி-யை தொடர்ந்து... உங்கள் வீட்டு இல்லத்திரையிலும் 'வாரிசு' ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி, மாலை 6:30 மணிக்கு வாரிசு திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. இந்த தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் குஷியாக்கி உள்ளது.