படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! 42 வயது நடிகை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

First Published | Apr 7, 2023, 10:47 PM IST

பிரபல நடிகை பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைப்பதாகவும், வர மறுத்தால் தன்னுடைய புகைப்படங்களை மாஃபிங் செய்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வருவதாகவும் கூறி, காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 

பிரபல பெங்காலி நடிகையான  ஸ்வஸ்திகா முகர்ஜி, சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'காலா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார். இவருடைய நடிப்பு முதல் படத்திலேயே, ரசிகர்கள் மத்தியில் பாராட்டை குவித்தது. இதைத்தொடர்ந்து இவர் நடித்து முடித்துள்ள, ஷிப்பூர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
 

இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இருக்கும் சந்தீப் சர்க்கார்,மற்றும் அவரின் கூட்டாளியான  ரவி ஷர்மா ஆகியோருக்கு, எதிராக நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி காவல் நிலையத்தில் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

49 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்..! எப்போது கல்யாணம்? தந்தை கூறிய குட் நியூஸ்!
 

Tap to resize

இந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது, தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் அவரின் ஆசைக்கும், அவரின் நண்பர்கள் ஆசைக்கும் இணங்குமாறு கூறி, படுக்கைக்கு அழைப்பதாகவும்...  மேற்படி அதனை நான் ஏற்காத பட்சத்தில், தன்னுடைய புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஸ்வஸ்திகா கொடுத்த புகாரின் அடிப்படையில், கோல்ப் க்ரீன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த புகார் குறித்து, காவல் நிலைய அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலின் படி, நடிகை குற்றம் கூறியுள்ள இணை தயாரிப்பாளர் தொடர்பு கொள்ள  போலீசார் முயற்சித்து வருவதாகவும், அவர் அமெரிக்காவில் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைடு போஸில் முதுகு முதல் இடுப்பு வரை மொத்தமாக காட்டிய ரம்யா பாண்டியன்! மொத்த அழகை பார்த்து ஸ்தம்பித்த இன்ஸ்டா!

Latest Videos

click me!