கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில், டஸ்கி ஸ்கின் பியூட்டியான நட்க்ஷத்ரா கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் நடித்தார். இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூலில் தோல்வியை தழுவியது.
414
சில வருடங்கள் அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருந்த நக்ஷத்ரா பின்னர் சீரியலில் நடிக்க தயாரானார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் ஹீரோயினாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
யாரடி நீ சீரியல் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உருவானது. பரபரப்பாக சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே, கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்ஷத்ரா கேரள முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
614
முன்பே திருமணம் செய்து அறிவிக்காத நக்ஷத்ரா திடீர் என திருமணம் செய்து கொண்டதால் ரசிகர்கள் ரகசிய திருமணமா? என கேள்வி எழுப்பினர்.
திருமணத்திற்கு பின்னர், கணவரோடு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இவர் இது ரகசிய திருமணம் இல்லை என்றும் சூழ்நிலை காரணமாக திடீர் என திருமணம் நடந்தகாக கூறினார்.
814
பின்னர் திருமணம் குறித்து கணவருடன் சேர்ந்து கொடுத்த பேட்டியில்... தன்னுடைய தாத்தாவுக்கு உடல் நலம் இல்லாத காரணத்தினால் திடீர் என திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிவித்தார்.
914
அவர் தன்னுடைய திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டதால் மிகவும் அவசர அவசரமாக இந்த திருமணம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார் நக்ஷத்திரா. ஹீரோயினாக நடித்த நக்ஷத்ரா அதிரடியாக 'வள்ளி திருமணம்' சீரியலில் வில்லி அவதாரம் எடுத்தார்.
1114
இந்த சீரியல் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், திடீர் என கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
1214
கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், கணவருடன் சேர்ந்து... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் கணவனுடன் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு 5 மாத சீர் கொடுத்த நிலையில்... இவரின் 7 மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த்துள்ளது. இதில் சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தி உள்ளனர்.
1414
நக்ஷத்திராவின் வளைகாப்பு போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.