சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். சயின்ஸ் பிக்சன் படமான இதனை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
24
சில பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட அயலான் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு நிறைவடைந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும், அதன் சிஜி மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆனதன் காரணமாக கடந்தாண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. தற்போது அந்த பணிகள் வெற்றிகரமாக முடிய உள்ளதால், அயலான் படத்தின் ரிலீஸ் வேலைகளையும் தொடங்கிவிட்டனர்.
அண்மையில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படத்தை வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போது அப்படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த முக்கிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 14-ந் தேதி வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தோடு அயலான் டீசரை ரிலீஸ் செய்யும் ஐடியாவில் படக்குழு உள்ளதாம்.
44
இதனால் ஜூலை 14 ந் தேதி ரசிகர்களுக்கு டபுள் டிரீட் காத்திருக்கிறது. மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு, சுனில், சரிதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.