அஜித்தை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனரை தட்டிதூக்கிய விஜய்... தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா?

First Published | May 15, 2023, 2:25 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தை அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் 67-வது படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற மாஸான ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், லியோ மூலம் விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து விடும். இப்படத்தை வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

லியோ படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அதற்குள் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் இப்படத்தை அட்லீ இயக்குவார் என கூறப்பட்டது. பின்னர் அவர் பாலிவுட்டில் பிசியானதால் அவர் இயக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது. இதன்பின்னர் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனியின் பெயரும் அடிபட்டது. பின்னர் அதுவும் வதந்தி என கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... மும்பையில் செட்டிலானதும் இந்தி பட வாய்ப்பை தட்டிதூக்கிய ஜோதிகா... 25 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட்டில் ஜோ எண்ட்ரி

Tap to resize

இதையடுத்து இந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜின் பெயரும் வந்தது. தற்போது அந்த பட்டியலில் புது வரவாக இணைந்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததில் இருந்தே வெங்கட் பிரபு உடன் பணியாற்ற வேண்டும் என விஜய் விருப்பம் தெரிவித்து வந்ததாக வெங்கட் பிரபுவே பல்வேறு பேட்டிகளில் கூறி உள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படு தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த சமயத்தில் அவர் விஜய் படத்தை இயக்க உள்ளதாக பரவி வரும் தகவல், விஜய் ரசிகர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இதையும் படியுங்கள்... திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின்... பெண் குழந்தைக்கு அம்மா ஆன குஷியில் விருமாண்டி பட நடிகை அபிராமி

Latest Videos

click me!