இதையடுத்து மிடில்கிளாஸ் மாதவன், சமுத்திரம் தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்த அபிராமிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது விருமாண்டி தான். இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்திருந்த அபிராமி, மதுரைப் பெண்ணாகவே வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.