என்ன காண்டம் யூஸ் பண்றேன்னு கூட கேட்பியா... வம்பிழுத்த நெட்டிசனுக்கு பாத்திமா பாபு கொடுத்த செருப்படி ரிப்ளை

Published : May 15, 2023, 12:03 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பாத்திமா பாபு, தன்னிடம் அத்துமீறி பேசிய நெட்டிசனை வெளுத்துவாங்கும் விதமாக பதிவிட்டு உள்ளது வைரலாகி வருகிறது.

PREV
14
என்ன காண்டம் யூஸ் பண்றேன்னு கூட கேட்பியா... வம்பிழுத்த நெட்டிசனுக்கு பாத்திமா பாபு கொடுத்த செருப்படி ரிப்ளை

செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் பாத்திமா பாபு. இவர் தமிழில் கல்கி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த பாத்திமா, திருமணத்திற்கு பின் இந்து மதத்திற்கு மாறினார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை பாத்திமா பாபு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

24

சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவது, ரசிகர்களுடன் கலந்துரையாடுவது என பிசியாக இருந்து வரும் பாத்திமா, அதில் தன்னிடம் எடக்குமுடக்காக கேள்வி கேட்பவர்களையும் சும்மா விடுவதில்லை. பதிலுக்கு தரமான பதிலடியும் கொடுத்து வருகிறார். அந்த வகையில், அண்மையில் தன் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்து பாத்திமா பாபு பதிவிட்டுள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் சுமார் கலெக்‌ஷன்... திரையரங்கில் காத்துவாங்கும் கஸ்டடி - 3 நாளில் இவ்வளவுதான் வசூலா?

34
fathima babu

பாத்திமா பாபு தனது மகன்கள் ஆசிக் மற்றும் ஷாருக்கின் புகைப்படத்தை பதிவிட்டிருந்ததை பார்த்த ரசிகர் ஒருவர், 'உங்க ஆத்துக்கார் இந்து தானே நீங்க ஏன் உங்க குழந்தைகளுக்கு இந்து பெயர் வைக்கவில்லை?' என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பாத்திமா, 'என் பிள்ளைகள் இதனால் பாதிக்கப்படவில்லை, நீங்க ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?' என கேட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ரசிகர், 'கேட்க வேண்டும் என்று தோன்றியதால் கேள்வி கேட்டேன்' என்றார்.

44

அதற்கு பதிலளித்த பாத்திமா பாபு, நான் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை மசூதியில் திருமணம் செய்து கொண்டேன். மேலும் எனது குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்கள் வைத்தால் உனக்கென்ன பொத்திகிட்டு போ என பதிவிட்டார். அதற்கு அந்த ரசிகர், 'இது பொது மேடை, நான் தகாத முறையில் எதையும் கேட்கவில்லை' என்றார். அதற்கு பாத்திமா, 'பொதுமேடைனா, நான் என்ன பிராண்ட் காண்டம் பயன்படுத்துகிறேன் என்று கூட கேட்கிறீர்களா?' என்று கேட்டவுடன் அந்த நபர் எதுக்கு வம்புனு அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டார். 

இதையும் படியுங்கள்... ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாகும் முன்பே... அடுத்த படத்துக்காக முன்னணி நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories