தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர். இதையடுத்து குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா.
அண்மையில் நடிகர் சூர்யாவுடன் மும்பையில் புதிதாக வீடு ஒன்று வாங்கி செட்டில் ஆனார் ஜோதிகா. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக தான் அங்கு செட்டில் ஆன தகவல் பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது நடிகை ஜோதிகா, பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.