தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தமிழில் அறிமுகம் செய்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர். மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், இதையடுத்து, அவர் இயக்கத்தில் குரு, இராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் ஐஸ்வர்யா ராய் நல்ல பெயரையும் பல்வேறு விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன.
அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் அதிகளவில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் என்றால் அது விக்ரம் தான். இவர்கள் இருவரும் மணிரத்னம் இயக்கிய இராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் இணைந்து நடித்து இருந்தனர். இந்த இரண்டு படங்களிலும் இவர்களது காதலுக்கு சோகமான முடிவை கொடுத்திருப்பார் மணிரத்னம். இராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டு படங்களிலுமே ஐஸ்வர்யா ராயை உருகி உருகி காதலிக்கும் விக்ரம் கடைசியில் இறந்துவிடுவார்.
இதையும் படியுங்கள்... அஜித்தை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனரை தட்டிதூக்கிய விஜய்... தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா?
விக்ரமுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருப்பதால், அவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து வைக்கும் படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது. அது விரைவில் நடக்க இருப்பது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதன்படி விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்களாம்.