GV Prakash acting in Selvaraghavan Direction : செல்வராகவன் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் குமார் தற்போது முதன்முறையாக அவர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கியவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த செல்வராகவன், கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்வியை சந்தித்ததால் டைரக்ஷனுக்கு ரெஸ்ட் விட்டு நடிகராக மாறினார். விஜய்யின் பீஸ்ட் படம் தொடங்கி அண்மையில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஏராளம்.
24
GV Prakash
இந்த நிலையில், தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன், தன்னுடைய அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி இதற்கு இசையமைக்கப் போவதும் ஜிவி பிரகாஷ் தான். அதுமட்டுமின்றி இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பையும் ஜிவி பிரகாஷ் குமார் தான் ஏற்றிருக்கிறார். இப்படத்திற்கு மெண்டல் மனதில் என பெயரிடப்பட்டு உள்ளதாம்.
ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் கிங்ஸ்டன் என்கிற படத்தை அவர் தயாரித்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள 25வது படமாகும். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருக்கிறார். ஏற்கனவே பேச்சிலர் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த திவ்ய பாரதி தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.
44
selvaraghavan team up with GV Prakash
அதேபோல் செல்வராகவனும், ஜிவி பிரகாஷும் இணையும் மூன்றாவது படம் தான் மெண்டல் மனதில். இதற்கு முன்னர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். கடந்த 13 ஆண்டுகளாக இந்த கூட்டணி இணையாமலே இருந்த நிலையில், தற்போது மெண்டல் மனதில் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.