2024-ம் ஆண்டின் 49வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. இதில் பாக்கியலட்சுமி சீரியல் 10-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 9ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.09 டிஆர்பி புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு இடம் பின் தங்கி, 6.32 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் உள்ளது. சரிவை சந்தித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 7.64 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.