இன்றைய சூழலில் சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் சோசியல் மீடியா மூலம் வைரல் ஆனால் போதும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. சினிமா வாய்ப்பு தேடி சொந்த ஊரைவிட்டு வந்தவர் ஏராளம், ஆனால் அவர்களில் சினிமாவில் சாதித்தவர்கள் வெகு சிலரே. அப்படி சிறு வயதிலேயே சினிமா ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்து தங்க இடமின்றி பிளாட்பாரத்தில் தூங்கிய ஒருவர் இன்று 7300 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் தான் ஷாருக்கான்.