Rajinikanth Movies
கோலிவுட் திரை உலக ரசிகர்களால் தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், ஸ்கிரீன் ப்ளே ரைட்டர், என தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி க் கொண்டுள்ள ரஜினிகாந்த், ஒரு பஸ் கண்டக்டராக இருந்து முன்னணி நடிகராக மாறியவர் என்பதால், இன்றுவரை சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார். மேலும் திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகிப் பால்கி விருதை வென்றுள்ளார். அதே போல் பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வழங்கி மத்திய அரசும் இவரை கௌரவித்துள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்தின் 10 தனித்துவமான கதாபாத்திரம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Sivaji Movie Pivotal Role
சிவாஜி:
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த மற்றொரு திரைப்படம் 'சிவாஜி'. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், ரஜினிகாந்த் சிவாஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு சாமானிய மனிதன் தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க நினைக்கும் நிலையில், இதனால் எப்படி பட்ட பிரச்சனைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறார் என்பதே இந்த படம். இந்த படத்தில் சிவாஜியாக நடித்த ரஜினி, ஆக்ஷனில் மட்டும் அல்ல, காதல், ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் பொளந்து கட்டியிருப்பார்.
Suresh Krishna And Rajinikanth Acting Baasha
பாட்ஷா:
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாட்ஷா. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் தன்னுடைய குடும்பத்துக்காக தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ டிரைவராக வாழ்வார். எதிர்பாராது திருப்புமுனைகளுடன் வெளியாகி, ரஜினிகாந்தை ஆட்டோ ஓட்டுனர்களின் நண்பராக நினைக்க வைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த மாணிக்கம் கதாபாத்திரம்.
KS Ravikumar Movie Padayappa Character
படையப்பா:
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த திரைப்படங்களில் ஒன்று 'படையப்பா'. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், மறைந்த நடிகை சௌந்தர்யா ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணா ரஜினிகாந்துக்கே சவால் விடும் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உறவினர்களால் சொத்துக்கள் அனைத்தையும் இழக்கும் ரஜினிகாந்த் எப்படி மீண்டும் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார் என்கிற மாஸ் திரைப்படம் தான் படையப்பா.
புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் மற்றொரு மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!
Ks Ravikumar Movie Linga Character
ராஜா லிங்கேஸ்வரன்:
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லிங்கா. இந்த படத்தில் வெள்ளையனை எதிர்த்து தன்னுடைய மக்களுக்காக அணைக்கட்ட பாடுபடும் ஒரு ராஜா கதாபாத்திரத்தில் தான் ரஜினிகாந்த் நடித்திருப்பார். மக்களின் தேவை அறிந்து இவர் கட்டும் அணைக்கு வரும் எதிர்ப்புகளால், ராஜா தன் சொத்துக்களை இழந்து, வேறு ஊருக்கு சென்றாலும் இவரை அந்த கிராமம் கொண்டாடுகிறது. இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராஜா லிங்கேஸ்வர் கதாபாத்திரம் ரஜினிக்கு தனித்துவமான அடையாளத்தை பெற்று தந்தது.
Rajinikanth Muthu Movie Role
முத்து:
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு ஜமீன்தாருக்கு மகனாக பிறக்கும் நிலையில், ஒரு வேலைக்காரராக வளர்க்கப்படுகிறது. மிகவும் எதார்த்தமான காதலிக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. முத்து தற்போது வரை தலைவர் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் திரைப்படமாக உள்ளது.
மறைந்த பின்னரும் மனைவிக்கு மரியாதை; கோவில் கட்டி கொண்டாட போகும் மதுரை முத்து!
Bharathi Raja 16 Vayathinilea Parattaiyan
பரட்டையன்:
ரஜினி எப்போதுமே, தனக்கென தனி அடையாளத்தை பாதிக்க கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்பவர் என்பதை, ஹீரோவாக மட்டும் அல்ல வில்லனாகவும் உறுதி படுத்தியவர். இதை 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடித்து வெளியான 16 வயதினிலே படத்தில் நடித்த பரட்டையன் கதாபாத்திரம் மூலமே உறுதி செய்துவிட்டார்.
Rajinikanth Divotinal Movie Raghavendra Character
ஸ்ரீ ராகவேந்திரா:
எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், 1985 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஸ்ரீ ராகவேந்திரா.
இந்த படத்தில் ராகவேந்திரா கதாபாத்திரத்தில் தான்ரஜினிகாந்த் நடித்திருந்தார். ராகவேந்திராவின் வாழ்க்கை படமாக உருவான இந்த ஆன்மீக படத்தில், ரஜினியின் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பு திரையில் பார்த்தாலே மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் இருக்கும்.