
தென்னிந்திய சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படுவது புஷ்பா 2 படமும், அதில் நடித்த பிரபலங்களும் தான். புஷ்பா முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட புஷ்பா 2 தி ரூல் படத்திற்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் தான் புஷ்பா 2.
ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது. இப்போது படம் வெளியாகி 7 நாட்களை கடந்த நிலையில், ரூ.1025 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
எப்படி புஷ்பா படத்திற்கு சிறந்த நடிகருக்கான அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்ததோ, அதே போன்று புஷ்பா 2 படத்திற்கு அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அல்லு அர்ஜூன் எப்படி ஆக்ஷன் காட்சியில் கலக்கியிருந்தாரோ அதே அளவிற்கு ராஷ்மிகா மந்தனாவும் தன் பங்கிற்கு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.
இதையெல்லாம் தாண்டி குத்துப்பாடலுக்கு வந்த ஸ்ரீலீலாவின் டான்ஸ் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாகிவிட்டது. ரீலீஸ் அளவிற்கு சென்று புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்த பாடலின் மூலமாக மற்ற ஹீரோயின்களின் பட வாய்ப்பும் இப்போது ஸ்ரீலீலாவிற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குண்டூர் காரம் படம் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீலீலா. 23 வயதே ஆகும் ஸ்ரீலீலா கவர்ச்சியிலும் சக்கை போடும் நிலையில், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்ற பாடலில் தோன்றி ரசிகர்களை திக்கு முக்காட செய்தார். புஷ்பா 2 படத்தில் கடைசி நேரத்தில் இணைந்த ஸ்ரீலீலாவிற்கு இந்தப் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
குண்டூர் காரம் படத்தில் முதலில் பூஜா ஹெக்டே தான் ஹீரோயினாக நடிக்க இருந்தார். ஆனால், அவர் பிராஜக்டிலிருந்து வெளியேறிய பிறகு ஸ்ரீலீலா படத்தில் இணைந்தார். இந்த நிலையில் தான் இப்போது விருபாக்ஷா பட இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது அவருக்குப் பதிலாக ஸ்ரீலீலா படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். புஷ்பா 2 படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ராபின்ஹூட் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் முதலில் ராஷ்மிகா மந்தனா தான் நிதினுக்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம். ஆனால், கால்ஷீட் காரணமாக ராஷ்மிகா மந்தனா விலகிய பிறகு ஸ்ரீலீலா படத்தில் இணைந்துள்ளார்.
இப்படி பூஜா ஹெக்டே, மீனாட்சி சவுத்ரி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது வாய்ப்புகளை எல்லாம் ஸ்ரீலீலா தட்டி பறித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மாஸ் ஜாத்தாரா படமும், பவன் கல்யாண் படமும் கைவசம் உள்ளது.