
தமிழ்நாட்டைச் சேர்ந்த, கோத்தகிரி பெண்ணான நடிகை சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அமரன்'. 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள இந்த படத்தை தொடர்ந்து, தற்போது சீதையாக மாறி ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் ஒப்பிட்டு, சாய்பல்லவி குறித்து பிரபல முன்னணி தளத்தில் வெளியான வதந்திக்கு தான், சமூக வலைத்தளத்தில் சாய் பல்லவி மிகவும் கோவமாக பதிலளித்துள்ளார்.
மருத்துவரான நடிகை சாய் பல்லவி, திரையுலகில் நடிக்க காரணமாக அமைந்தது அவருடைய நடனம் தான். சிறு வயதில் இருந்தே நடனம் மீது அதிக ஆர்வம் கொண்ட சாய்பல்லவி, பிரபல தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி பரிசுகளையும் வாங்கினார். இதன் பின்னர் சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த சாய்பல்லவிக்கு, மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாய் பல்லவி, இப்படத்தில் ஏற்று நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாள திரையுலக ரசிகர்களை தாண்டி தெலுங்கு மற்றும் தமிழ் பட ரசிகர்கள் மனதையும் கவர்ந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வசூலில் மிரளவைத்த டாப் 5 படங்கள்!
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் மலையாளத்தில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் பிஸியான நடிகையாக மாறினார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த 'மாரி' திரைப்படம் கமர்ஷியல் ஹிட் அடித்தது. அதேபோல் இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், youtube-பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்கிற சாதனையையும் படைத்தது.
முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்துள்ள சாய் பல்லவி, சூர்யாவுக்கு ஜோடியாக எல் ஜி கே திரைப்படத்தில் நடித்த நிலையில், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து கடந்த மாதம் வெளியான 'அமரன்' திரைப்படம், ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் மற்றொரு மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!
தற்போது சாய் பல்லவி, ஹிந்தி திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்... அனிமல் பட நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமர் வேடத்தில் நடிக்க, சாய் பல்லவி சீதா ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி முழுக்க முழுக்க சைவமாக மாறிவிட்டார் என ஒரு வதந்தி வெளியானது.
அதாவது, 'ராமாயணம்' படத்தில் நடித்து வருவதால் அசைவம் சாப்பிடாமல் இருக்கும் சாய் பல்லவி, ஷூட்டிங் செல்லும் போது, தன்னுடன் ஒரு சமையல் காரரையும் அழைத்து செல்கிறார். அவர் செய்து கொடுக்கும் உணவுகளையே சாப்பிடுவதாக கூறப்பட்டிருந்தது. இது தான் நடிகை சாய் பல்லவியை உச்சகட்ட கோவத்தில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
நாக சைதன்யா திருமணத்தில் அணிந்திருந்த Patek Philippe வாட்ச்; எத்தனை லட்சம் தெரியுமா?
இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை சாய் பல்லவி, "என்னை பற்றி வெளியாகும் பொய்யான தகவல்களுக்கு நான் பலமுறை அமைதியாக தான் இருந்துள்ளேன். இது போன்ற செய்திகளை என்ன உள்நோக்கத்தில் வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்கு தான் தெரியும். இது போன்ற வதந்திகள் வெளியாவது தொடர்கதையாக உள்ளது. ஆனால் இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் பதில் அளிக்கும் நேரம் இது! என் படங்களில் ரிலீஸ் அறிவிப்புகள் வரும்போதும், என் கேரியரில் முக்கிய நேரங்களிலும் இது போன்ற வதந்திகள் அதிகம் பரவுகிறது. இது போன்ற பொய்யான செய்திகள் இனிமேல் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.