
நயன்தாரா ஆவணப்படம்
நடிகை நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அப்போது அவரது வாழ்க்கைக் கதையை ஆவணப்படமாக படமாக்கும் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், திருமணத்திற்கான டிஜிட்டல் உரிமையையும் வாங்கி இருந்தது. இதனால் நயன்தாரா திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் யாரும் வீடியோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக அந்த ஆவணப்படம் வெளியிடப்படாமல் இருந்தது.
தனுஷ் உடன் சண்டை
இதற்கு காரணம் தனுஷ் தயாரித்த நானும் ரெளடி தான் படத்தில் இருந்து சில பாடல் வரிகளை பயன்படுத்த அனுமதி கோரி, அதற்கு தடையில்லா சான்று பெற காத்திருந்தனர். ஆனால் தனுஷ் தரப்பில் அனுமதி வழங்கப்படாததால் வேறு வழியின்றி அந்த பாடல் வரிகள் இல்லாமலேயே அந்த ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்து அதன் டிரைலரை கடந்த மாதம் வெளியிட்டனர். அதில் நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்றை பயன்படுத்தி இருந்தனர்.
நயன்தாரா அறிக்கை
அந்த 3 விநாடி வீடியோ காட்சியை நீக்காவிட்டால் 10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் கடுப்பான நயன்தாரா, தனுஷை சரமாரியாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆவணப்பட ரிலீஸ் சமயத்தில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டதால், பப்ளிசிட்டிக்காக இதை செய்வதாக விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நயன்தாரா இதுபற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மறுபடி ஒரு டைவர்ஸா! தனுஷ், ஜிவி வரிசையில் விவாகரத்தை அறிவித்த பிரபல இயக்குனர்
நயன்தாரா விளக்கம்
எப்படி இவ்வளவு தைரியமாக ஒரு அறிக்கை வெளியிட்டீர்கள் என தொகுப்பாளினி கேட்க, அதற்கு பதிலளித்த நயன், நான் ஏன் பயப்படனும், ஏதாவது தப்பு செய்திருந்தால் தான் நான் பயப்பட வேண்டும். பப்ளிசிட்டிக்காக ஒருவரின் இமேஜை டேமேஜ் செய்யும் ஆள் நானில்லை. நாங்கள் பப்ளிசிட்டிக்காக இதை செய்ததாக சொல்கிறார்கள். சொல்லப்போனால் இது படம் கிடையாது. இது ஒரு டாக்குமெண்ட்ரி, அவரை பிடித்திருந்தால் பார்க்கப்போகிறீர்கள். இது ஹிட் அல்லது பிளாப் என்கிற வரயரைக்குள் வராது.
நான் வெளிப்படையாக பேசியதால் தான் அது சர்ச்சையாக மாறியது. நான் உண்மையாகவே அவரை தொடர்புகொள்ள முயன்றேன். அப்போ தான் அதற்கான பதில் கிடைக்கும் என எண்ணினேன். அவரை தொடர்புகொள்ள பல வழிகளில் முயன்றோம். ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. அதனால் காட்சிகளை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்தோம். அவர் படம் அவர் தரவில்லை என்றால் விட்டுவிடுவோம் என முடிவெடுத்தோம்.
ஆனால் அப்படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய 4 பாடல் வரிகளை பயன்படுத்த ஆசைப்பட்டோம். அந்த 4 வரிகளும் எங்களுக்கு பர்சனலாக மிகவும் நெருக்கமானது. அதனால் அதை பயன்படுத்த விரும்பினோம். அந்த நான்கு வரிகளும் எங்கள் வாழ்க்கையும், எங்கள் காதலையும், எங்கள் குழந்தைகளையும் பற்றிய வரிகளாகும். அதனால் தான் நாங்கள் அதற்கான உரிமையை பெற போராடினோம்.
தனுஷ் எனக்கு நல்ல நண்பர் என்பதால் அவர் தான் முதலில் எங்களுக்கு அனுமதி தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கு எதனால் எல்லாம் மாறியது என தெரியவில்லை. அதெல்லாம் போகட்டும் நான் உண்மையிலேயே தனுஷிடம் பேசி, என்ன பிரச்சனை என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் அது கடைசி வரை முடியவில்லை. அதன்பின்னர் எங்கள் மொபைலில் எடுத்த காட்சிக்கு உரிமை கோரியது எனக்கு சரியாக படவில்லை. அதனால் தான் அந்த அறிக்கையை வெளியிட்டேன் என நயன் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் பணக்கார ஜோடி! விக்கி - நயனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?