நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகில், பல இளம் ஹீரோக்கள் ஜோடி போட ஆசைப்படும் கதாநாயகிகள் லிஸ்டில், முன்னணி இடத்தில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகை மேனகா தயாரிப்பாளர் சுரேஷின் மகள் என்கிற அடையாளத்துடன் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், இவர் தனக்கான இடத்தை திரையுலகில் தக்க வைத்து கொள்ள மிக முக்கிய காரணம் இவரின் திறமையான நடிப்பும் கொஞ்சம் அதிஷ்டமும் தான்.
28
South Indian Leading Actress Keerthy Suresh
முதல் படத்திலேயே நடிகர் விக்ரம் பிரபுவுக்கு, ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் என தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்து இளம் ஹீரோயின்களை பொறாமை பட வைத்தார்.
Keerthy Suresh Weds Long Days Boy Friend Antony Thattil
குறிப்பாக தளபதி விஜய்யுடன் மட்டும் பைரவா, சர்க்கார் என இரண்டு படங்களில் நடித்தார். மேலும் இவருடைய மார்க்கெட் அடிக்கடி கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், அதனை நிலையாக நிற்க வைத்தது, சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம். இந்த படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது மட்டும் இன்றி, இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
48
Keerthy Suresh Marriage Photos Goes Viral
இந்த படத்திற்கு பின்னர் ஹீரோயின் சப்ஜெட் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கிய கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது.
இதை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட 2 படங்கள் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஆண்டனி தட்டில் என்கிற பிஸ்னஸ் மேக்நெட்டை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த போது, தன்னுடைய திருமணம் குறித்த தகவலை கீர்த்தி உறுதி செய்தார்.
68
Keerthy Suresh And Antony Thattil Pair
கீர்த்தி சுரேஷின் காதலர் ஆண்டனி தட்டில் ஒரு கிறிஸ்தவர் என்பதால், இவர்களின் திருமணம் கிருத்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி ஆண்டாளாக மாறி, ஆண்டனிக்கு கழுத்தை நீட்டியுள்ள வெட்டிங் போட்டோஸ் தான் வைரலாகி வருகிறது.
கீர்த்தி - ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் நடந்திருந்தாலும்... பிராமண முறைப்படி கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற பட்டு சேலையில் ஆண்டாள் வேடத்தில் இருக்க, அவருக்கு மாப்பிள்ளை ஆண்டனி தட்டில் நெற்றியில் திருநாமம் போட்டு, பட்டு வேஷ்டியில் தாலி கட்டியுள்ளார்.
88
Keerthy Suresh Brahmin Style Wedding
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் உட்பட சில முக்கிய திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தற்போது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.