Nayanthara
நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதல்
நடிகர் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன், இவர் அடுத்ததாக இயக்கிய படம் தான் நானும் ரவுடி தான், இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹிரோயினாக நடித்திருப்பார். இந்த படத்தின் போது நயன்தாராவிற்கும் - விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.
இதனையடுத்து சில ஆண்டுகள் ஒன்றாக காதல் வயப்பட்டு சுற்றியவர்கள் கடந்த ஆண்டு மிகப்பிரம்மாண்ட அளவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் பெற்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவர்களது திருமணத்தை ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளம் கடந்த மாதம் வெளியிட்டது.
nayanthara husband
ந்யன்தாரா திருமண ஆவணப்படம்
இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர்பான பல காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதில் இரண்டு பேருக்கும் காதல் உருவான படமான நானும் ரவுடி தான் படத்தின் காட்சியும் இடம்பெற நயன்தாரா விருப்பப்பட்டுள்ளார். இந்த படத்தின் தயாரித்தவர் நடிகர் தனுஷ், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் மற்றும் காட்சியை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் அனுமதி வழங்காத நிலையில் படத்தின் சூட்டிங் போது பயன்படுத்தப்பட்ட காட்சிகள் மட்டும் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தது
nayanthara dhanush
தனுஷ்- நயன்தாரா மோதல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் அரசு நிலத்தை விலைக்கு கேட்டதாக தகவல் ஒன்று பரபரப்பாக பரவி வருகிறது. அந்த வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அழகு சாதன பொருட்கள், நாப்கின் உள்ளிட்டவைகளை தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்யும் நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.
Nayanthara and Vignesh Shivan
புதுச்சேரி அமைச்சரை சந்தித்த விகனேஷ் சிவன்
இந்தநிலையில் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நேற்று புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சரை லட்சுமி நாராணயணனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விற்பனை செய்வதாக இருந்தால் வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியானது .
puducherry government
அரசு நிலத்தை விலைக்கு கேட்டாரா.?
அல்லது அரசு விற்கும் எண்ணம் இல்லையென்றால் ஒப்பந்த அடிப்படையிலாவது தரமுடியுமா என புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சரிடம் கேட்டதாகவும், இதற்கு அரசுக்கு சொந்தமான இடத்தை யாருக்கும் விற்பனை செய்யமுடியாது என அமைச்சர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.இந்தநிலையில் அரசு சொத்தையே விற்பனைக்கு கேட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,
இது தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், வெளி நாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் போல புதுச்சேரியிலும் நடத்துவதற்கு அனுமதி கேட்டு தான் விக்னேஷ் சிவன் வந்ததாக தெரிவித்தார்.
Nayanthara and Vignesh Shivan
நடந்தது என்ன.?
மேலும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்த அரசை யார் வேண்டும் என்றாலும் அணுகலாம் என தெரிவித்தவர், உரிய கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும் என கூறினார். எனவே அந்த அடிப்படையில் தான் விக்னேஷ் சிவன் அணுகியதாக அமைச்சர் லஷமி நாராயணன் தெரிவித்தார்.