நடிகர் விஜய்யின் வீட்டு பெட்ரூமில் வைத்து பிரபல இசையமைப்பாளர், தளபதி பாடிய பாடலை ரெக்கார்டிங் செய்திருக்கிறார். அது எந்த பாடல் என்பதை பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய் திறமை மிக்க நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு சிறந்த பாடகரும் கூட. தமிழ் சினிமாவில் இதுவரை அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. அப்படி பாடகராகவும் சிறந்து விளங்கிய விஜய், அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்கள் பாடி இருக்கிறார். அதில் விஜய் பாடிய சூப்பர் ஹிட் பாடல் ஒன்று நடிகர் விஜய் வீட்டின் பெட்ரூமில் வைத்து ரெக்கார்டிங் செய்யப்பட்டதாம். அது எந்த பாடல் என்பதை பார்க்கலாம்.
24
Sachein Movie
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சச்சின். இப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும், வடிவேலுவின் எவர்கிரீன் காமெடியும் தான் சச்சின் படம் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்திருக்க முக்கிய காரணம். இப்படத்தின் பாடல்களுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவுக்கு தரமான பாடல்களை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
அந்த வகையில் சச்சின் படத்தில் இடம்பெற்ற ‘வாடி வாடி கைபடாத சிடி’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் சேர்ந்து வடிவேலுவும் பாடி இருப்பார். இப்பாடல் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவலை இயக்குனர் ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்த பாடல் தொடர்பாக டிஸ்கஸ் செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் நடிகர் விஜய் வீட்டுக்கு சென்றிருந்தாராம். அப்போது தனக்கு வாய்ஸ் ரூம் வேண்டும் என விஜய்யிடம் கேட்டிருக்கிறார்.
44
Vaadi Vaadi Song Secret
அதற்கு நான் எங்கு போவேன் என விஜய் பதிலுக்கு கேட்க, வார்டு ரோப் இருக்கா எனக் கேட்டதும், அவரை தன்னுடைய வீட்டின் பெட் ரூமுக்கு அழைத்து சென்றிருக்கிறார் விஜய். உடனே அதை ஒரு ஸ்டூடியோவாக மாற்றி, அங்கேயே அப்பாடலை விஜய்யை பாடவும் வைத்திருக்கிறார். விஜய் வீட்டு பெட்ரூமில் பதிவு செய்யப்பட்ட அப்பாடல் தான் இன்று பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. சச்சின் திரைப்படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதை கொண்டாடும் விதமாக வருகிற ஏப்ரல் மாதம் அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.