Anna Serial : அசிங்கப்பட்டு நிற்கும் ரத்னா! அதிர்ச்சியின் உச்சத்தில் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!

Published : Feb 25, 2025, 11:10 AM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், எப்படியும் ரத்னாவை பழிவாங்க துடித்து கொண்டிருக்கும் வெங்கடேஷ் சௌந்தரபாண்டி உதவியுடன் தன்னுடைய பிளானை எக்சிகியூட் செய்த நிலையில், இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.  

PREV
15
Anna Serial : அசிங்கப்பட்டு நிற்கும் ரத்னா! அதிர்ச்சியின் உச்சத்தில் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!
அண்ணா சீரியல்

திங்கள் முதல் சனி வரை, இரவு  8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்,  சீரியல் அண்ணா சீரியலின் நேற்றைய தினம் ரத்னா மற்றும் அறிவழகன் ஹெட் மாஸ்டர் ரூமுக்குள் வைத்து பூட்டப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

25
ரத்னா - அறிவழகனை சேர்த்து வைத்து பேசும் வெங்கடேஷ்

ரத்னா எப்போதும், பொழுதுக்குள் வீட்டுக்கு வந்து விடுவாள், இன்று ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது. அப்படி யாரிடமும் சொல்லாமல் எங்கே போயிருப்பா? என குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து சந்தடி சாக்கில், ஒண்ணுமே தெரியாதவன் போல் இருக்கும் வெங்கடேசன் என்னக்கு என்னமோ ரத்னா அந்த அறிவழகன் கூட தான் பேசிகிட்டு இருப்பானு தோணுது என சொல்ல, சண்முகம் தேவை இல்லாமல் யாரும் கண்டதை பேச வேண்டாம் என கூறி பதிலடி கொடுக்கிறான்.

ரத்னாவை அசிங்கப்படுத்த நடக்கும் சதி - ஷண்முகம் இதை தாங்குவாரா? அண்ணா சீரியல் அப்டேட்!
 

35
ரத்னா செல்ஃபோன் நம்பரை ட்ராக் செய்த முத்துப்பாண்டி

சண்முகத்தை சமாதானம் செய்ய நினைக்கும் பரணி, சரி இது சண்டை போடுற நேரம் இல்ல. இப்போ நம்ப ரத்னாவ காணும். மொதல்ல அவள் எங்க இருப்பான்னு தெரியணும் என்று சொல்ல, சண்முகம் ரத்னாவை தேடி கொண்டு பள்ளிக்கு செல்கிறான். இன்னொரு பக்கம், ரத்னா மற்றும் அறிவழகன் செல்போன் நம்பரை ட்ராக் செய்து, அவர்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்கிறான்.

45
மயங்கி கிடைக்கும் ரத்னா - அறிவழகன்

இந்த விஷயத்தை சண்முகத்துக்கு முத்துப்பாண்டி தெரிவிக்க, இருவரும் பள்ளிக்கு விரைகிறார்கள். அங்கு ஹெட் மாஸ்டர் ரூமில், ரத்னா மற்றும் அறிவழகன் இருவருக்கும், பியூன் கொடுத்த மயக்கமருந்து காப்பியை குடித்து விட்டு மயக்கமாகி விழுந்து கிடக்கிறார்கள்.

Anna Serial: சௌந்தர பாண்டி திட்டத்தை உடைத்த ஷண்முகம் - ஷாக் கொடுத்த பரணி? அண்ணா சீரியல் அப்டேட்!

55
சௌந்தர பாண்டி ஆசை நிறைவேறியது

சண்முகம் குடும்பத்தை பழிவாங்குவதில், உறுதியாக இருக்கும் சௌந்தரபாண்டி ஊர் மக்கள் அனைவரையும், ஒன்று கூட்டி ஹெட் மாஸ்டர் ரூம் கதவை திறக்க, இருவரும் ஒரே அறையில் இருப்பதை பார்த்து எல்லோரும் ரத்னாவை தவறாக புரிந்து கொள்கின்றனர். சௌந்தர பாண்டியும் இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? ஹெட்மாஸ்டர் ரூம்-மில் இருவரும் இத்தனை மணி வரைக்கும் என்ன பண்றங்க என நாக்கு மீது பல்லை போட்டு பேசுகிறார்.

ரத்னா கலங்கி போய் நிற்க, அறிவழகனை மரத்தில் கட்டி வைக்கின்றனர். சண்முகமும் பள்ளிக்கு விரைந்து வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போகிறது. என்ன என்பது குறித்து அறிய... அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories