சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் புஷ்பா 2. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1871 கோடி வசூலித்து இருந்தது. இப்படி மாஸ் ஹிட் அடித்த இப்படத்தை டீச்சர் ஒருவர் கடுமையாக சாடி இருக்கிறார். ஐதராபாத் அருகே யூசுஃப்குடாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் புஷ்பா 2 படத்தை விமர்சித்து பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. புஷ்பா மாதிரி படங்களினாலும், சோசியல் மீடியாவினாலும் பசங்க கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என எஜுகேஷன் கமிஷன் முன்னிலையில் அந்த டீச்சர் பேசி இருக்கிறார்.
24
Pushpa 2 Allu Arjun
அதில் அவர் பேசியதாவது : “ஸ்கூல்ல பசங்க நடந்துக்குறத பாத்தா, ஸ்கூல் அதிகாரிங்கிற முறையில நான் தோத்துட்டேன்னு தோணுது. பசங்க கண்ட ஹேர்ஸ்டைல்ல வர்றாங்க, அசிங்கமா பேசுறாங்க. நாங்க படிப்ப மட்டும் பாக்குறோம், இத கவனிக்கல. கவர்மெண்ட் ஸ்கூல்ல மட்டும் இல்ல, பிரைவேட் ஸ்கூல்லயும் இதுதான் நிலைமை. ஒரு அட்மினிஸ்ட்ரேட்டரா நான் தோத்துட்டேன்னு எனக்கு தோணுது. ஒரு டீச்சரா பசங்கள 'தண்டிக்க' எனக்கு தோணல. ஏன்னா அது அவங்கள பிரஷர்ல ஆக்கும். பசங்க இப்படி நடந்துக்குறதுக்கு சோஷியல் மீடியாவும் சினிமாவும்தான் காரணம்னு அந்த டீச்சர் கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்த பிரச்சனைய பத்தி பேச பேரண்ட்ஸ கூப்பிடும்போது கூட அவங்க பசங்கள கவனிக்கிற மாதிரி தெரியல. எங்களால அவங்கள தண்டிக்க கூட முடியாது. ஏன்னா அது அவங்கள தற்கொலைக்கு கொண்டு போகலாம். இதுக்கெல்லாம் நான் மீடியாவத்தான் குறை சொல்வேன். எங்க ஸ்கூல்ல பாதி பசங்க புஷ்பா படத்தால கெட்டுப் போய்ட்டாங்க. பசங்கள கெடுக்கும்னு தெரிஞ்சும் அந்த படத்துக்கு எப்படி சர்டிபிகேட் கொடுத்தாங்க” என அந்த டீச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.
44
Government school teacher criticize Pushpa films
புஷ்பா படம் பசங்கள மாத்திடுச்சுன்னு டீச்சர் பேசுன வீடியோ வைரலானதும், சமூக வலைதளங்களில் இதைபற்றி ஒரு விவாதமே நடந்து வருகிறது. படத்துக்கு சென்சார் கொடுத்தது தான் தப்பு என ஒரு குரூப் குறை சொல்ல, பசங்கள பாத்துக்க வேண்டியது பேரண்ட்ஸும் டீச்சர்ஸும்தான். அதுல சினிமாவுக்கு பெரிய ரோல் இல்லன்னு இன்னொரு குரூப் மல்லுக்கட்டி வருவதால் சோசியல் மீடியாவில் இந்த விவகாரம் களேபரம் ஆக மாறி இருக்கிறது.