
Director Shankar Review About Dragon Movie : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான படம் தான் டிராகன். உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பள்ளியில் கோல்டுமெடல் உடன் வெளியேறி கல்லூரியில் ரௌடி, கிளாஸை கட் அடிப்பது என்று 48 பேப்பர் அரியருடன் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்.
கல்லூரியில் படிக்கும் போது காதலித்த பெண் கல்லூரிக்கு பிறகு கழற்றிவிடுகிறார். அதற்கு அவர் வேலைக்கு போகாதது தான் காரணம். இதையடுத்து சட்டவிரோதமாக போலியாக 48 பேப்பரும் தேர்ச்சி பெற்றது போன்று சான்றிதழ் பெற்று வெளிநாட்டு கம்பெனியில் ரூ.1.30,000க்கு வேலைக்கு சேருகிறார். வேலையும் நன்றாக போக, பெண் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அப்போது தான் எதேச்சியாக கல்லூரி முதல்வர் அவரை சந்திக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட மீதி கதை.
இந்தப் படத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கல்லூரியில் படிக்கும் போதே நன்றாக படித்து முடித்து தேர்ச்சி பெற்று வேலையில் சேர வேண்டும். போலீ சான்றிதழ் பெற்று வேலையில் சேர்ந்தால் அது என்றாவது ஒருநாள் பிரச்சனையை உண்டாக்கும். காதல், காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட் என்று எல்லா விதமான காட்சிகளையும் கொண்டு எடுக்கப்பட்ட டிராகன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலித்து இருந்தது.
அதேபோல் ஆந்திராவில் ரூ.5.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.3.5 கோடியும், இந்தியாவின் இதர மாநிலங்களில் ரூ.75 லட்சமும், வெளிநாடுகளில் ரூ.15 கோடியும் வசூலித்து இருந்தது. இந்நிலையில், 4ம் நாளான நேற்று மட்டும் இப்படம் ரூ5 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இதன் மூலம் தற்போதுவரை டிராகன் திரைப்படம் ரூ.55 கோடி வசூலித்து இருக்கிறது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பிரதீப் இயக்கி நடித்த லவ் டுடே படமும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.
சமீபகாலமாக சிறிய பட்ஜெட் படங்கள் தான் அதிக வசூல் குவித்து சாதனை படைத்து வருகின்றன. இந்த நிலையில் தான் டிராகன் படம் பார்த்த இயக்குநர் ஷங்கர் படம் குறித்து நேர்மறையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரொம்பவே அழகான படம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான முழுமையான பயணத்துடன் சிறப்பாக இருந்தது. படத்தோட கடைசி 20 நிமிடங்கள் கண்கலங்கச் செய்தது. டிராகன் படத்தில் சொல்லப்படும் விஷயம் இந்த உலகிற்கு முக்கியமானது என்று சோஷியல் மீடியாவில் பாராட்டு தெரிவித்துள்ளார். டிராகன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ், பிரதீப் மற்றும் அஸ்வத் காம்பினேஷனில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தையும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். வரும் 2027 ஆம் ஆண்டு இந்தப் படம் தொடங்க இருக்கிறது.