நடிகை சமந்தா தெலுங்கில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமான Ye Maaya Chesave படத்தில், நடிகர் நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி... கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
திரையுலக வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த நிலையில்... திடீர் என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து, சமந்தா தன்னுடைய குடும்ப பெயரான அக்கினேனி என்கிற பெயரை நீக்கினார். இதனால் இவர்கள் இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியான... ஆனால் இவருமே இது குறித்து வாய் திறக்காத நிலையில் திடீர் என கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.
விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர், இருவருமே தொடர்ந்து திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா தனக்கு ஆட்டோ இம்மியூன் பிரச்சனை உள்ளதாக கூறி அதிர வைத்தார். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவை அவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும், அந்த சந்திப்பின் போது இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
நடிகை சமந்தா நடிப்பில் வாடகைத்தாய் மருத்துவ முறைகேடை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'யசோதா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலை அள்ளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.