உண்மையில் கமல்ஹாசனுக்கு 68 வயது என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு, தன்னுடைய உடலையும்... மனதையும் இளமையாக வைத்துள்ளார். சமீபத்தில் இவர் தீபாவளி பண்டிகையின் போது, 'தேவர் மகன்' கெட்டப்பில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் மிகவும் வைரலான நிலையில், இப்போது அதையும் மிஞ்சும் அளவிற்கு சில போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மாடல்கள் மீது சாய்ந்தபடி, இவர் கொடுத்துள்ள போஸை பார்த்தால்... அவர் இன்றும்... இளமை இதோ... இதோ... பாடல்கள் வெளிவந்த அதே காலத்தில் தான் இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதோடு... உங்களுக்கு 68 வயது என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என தெரிவித்து வருகிறார்கள்.