அந்த விஷயத்தில் கூட... தென்னிந்திய நடிகை என்றால் அசிங்கப்படுத்துவங்க? சமந்தா கூறிய ஷாக்கிங் தகவல்!

First Published | Apr 15, 2023, 7:52 PM IST

நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள் என்றால்,  அசிங்கப்படுத்துவார்கள் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் நடிகர் கௌதமேனன் இயக்கத்தில் வெளியான Ye Maaya Chesave படத்தில், நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, தமிழில் இந்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என ரீமேக் செய்யப்பட்ட போது, ஒரு ஒரு கேமியோ ரோலில் நடித்து அசத்தினார்.
 

இதை தொடர்ந்து, பானா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நான் ஈ, தீயா வேலை செய்யணும் குமாரு, கத்தி, அஞ்சான், தங்கமகன், போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்தார்.

பெற்றோருக்கு சிலை வைத்து... ஊர் மக்களின் முக்கிய பிரச்னையை தீர்த்து வைத்த ரஜினிகாந்த்!
 

Tap to resize

குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், விக்ரம், தனுஷ், போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். முன்னணி ஹீரோயினாக இருக்கும்போதே... தன்னுடைய முதல் பட நாயகனும், நீண்ட நாள் காதலருமான, நடிகர் நாக சைதன்யாவை பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வந்தாலும்... குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா என இரு குதிரையிலுமே வெற்றிகரமாக பயணித்து வந்தார் . இந்நிலையில் யார் கண் பட்டதோ திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இவர்களின் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சமத்தா, கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் என்கிற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாள் சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தார்.

46 வயதிலும்... வேற லெவல் அழகு! ஜிமிக்கி பெண்ணாக மாறி... சிக்குன்னு போஸ் கொடுத்த மீனா! கியூட் போட்டோஸ்!
 

தற்போது தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்திருக்க அதிகப்படியான உடற்பயிற்சிகள் மற்றும் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் சமந்தா நடிப்பில் நேற்று வெளியான, சகுந்தலா திரைப்படம், கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சமந்தா தற்போது தென்னிந்திய படங்களை கடந்து, ஹிந்தி திரையுலகிலும் பிஸியாகி உள்ளார். இவர் ஹிந்தியில் நடித்த ;தி ஃபேமிலி மேன் 2; வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தற்போது சீட்டாடல் என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய நடிகை என்றால் அசிங்கப்படுத்துவாங்க என்று, இவர் கூறியுள்ள கருத்துதான் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டி.. சிரிச்சியே பட வாய்ப்பை வளைத்து போட்ட சினேகா! ரகசியத்தை உடைத்த பயில்வான்!

மேலும் இது குறித்து பேசுகையில், பல வருடங்களுக்கு முன்பெல்லாம் ஹிந்தி சினிமா தான் முன்னணியில் இருந்தது. தற்போது ஹிந்தியை விட தமிழ், தெலுங்கு, கன்னட, படங்கள் அதிகம் சாதித்து வருவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் காஸ்டியூம் டிசைனரிடம் இருந்து உடைகள் வாங்குவது கூட மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். காரணம் அந்த அளவிற்கு அசிங்கப்படுத்துவாங்க... நீ யார்? சவுத் ஆக்டரா? என்றெல்லாம் கேட்பார்கள் என கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Latest Videos

click me!