குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி... அந்த குழந்தையா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு, கதாநாயகியாக மாறி தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை மீனா. தன்னுடைய 5 வயதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், இதை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் சைல்ட் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளார்.
முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலுமே பிஸியான நடிகையாக மாறினார். குறிப்பாக தமிழ் திரையுலக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் தேடப்படும் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார்.
வயது அதிகரித்ததால், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல்... அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்கள் வர துவங்கிய பின்னர், திருமணத்திற்கு ஓகே சொன்ன மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, பெற்றோர் பார்த்த வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகை மீனா வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு, மீனாவின் கணவர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். கணவர் மரணத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மீனாவை அவரது தோழிகள் தான் தேற்றி, வெளியே கொண்டு வந்தனர்.
ஒரு பக்கம் முகம் வீங்கி... மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பிரபல நடிகை! ஷாக்கிங் புகைப்படம்...
சமீபத்தில் கூட நடிகை மீனா திரையுலகில் வெற்றிகரமாக 40 வருடங்கள் நிறைவு செய்ததற்கு மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது. மெல்ல மெல்ல... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் மீனா இந்த வர தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பட்டு புடவையில்... ஜிமிக்கி கம்மலுடன், சிக்கென கொடுத்திருக்கும் கியூட் போசுகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.