தமிழ் சினிமாவில், பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயாவிற்கு பிறகு புன்னகை அரசி என்கிற பெயரை தனதாக்கி கொண்டவர் நடிகை சினேகா. பார்ப்பதற்கு, பக்கத்து வீட்டு பெண் போல்... எதார்த்தமான அழகு, குறுகுறு கண்கள், முத்து சிதறும் சிரிப்பு.. என, அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்தார் சினேகா.
மலையாளத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான நடிகை சினேகா, அதே வருடம், தமிழிலும் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 'என்னவளே' என்கிற படத்தில் நடித்திருந்தார். சுமாரான வெற்றியை இப்படம் பெற்றாலும், அடுத்தடுத்து சினேகாவுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், கிங், ஏப்ரல் மாதத்தில், என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
ஆசை யாரை விட்டுச்சு... பாலாவிடம் சிக்கிய அருண் விஜய்! ஒவ்வொரு நாளும் ரணகளம்... நொந்து நூடுல்ஸ் ஆகும் பரிதாபம்?
90ஸ் கிட்ஸ்யின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சினேகா, தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து, தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சினேகா, பட்டாஸ் படத்தை தொடர்ந்து, மம்மூட்டி நடித்துள்ள கிறிஸ்டோபர் என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.