இயக்குனர் மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான துரோகி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் அவர் இயக்கிய படம் தான் இறுதிச்சுற்று. குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் மாதவன் நாயகனாக நடித்திருந்தார்.
நடிகர் மாதவனுக்கு கம்பேக் படமாகவும் இது அமைந்திருந்தது. இப்படத்தில் பாக்ஸிங் கோச் ஆக நடித்திருந்தார் மாதவன். அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ரித்தி சிங்கிற்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் மூலம் முன்னணி இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்தார். அப்படம் 6 தேசிய விருதுகளையும் அள்ளியது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதி... தலைவரே என்னாச்சு என பதறிப்போன ரசிகர்கள்
தற்போது சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கின் போது சுதாகொங்கராவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் ஷூட்டிங் செல்லாமல் ரெஸ்ட் எடுத்து வரும் இவர், தற்போது நடிகர் மாதவனை தனது வீட்டுக்கு அழைத்து தடபுடலாக விருந்தும் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.