ரஜினியின் பூர்வீக ஊரான வேப்பனப்பள்ளி பகுதியில், தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் பல குடும்பங்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், பெற்றோருக்கு சிலை வைத்தது மட்டுமின்றி... மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ரஜினிகாந்த், தண்ணீர் டேங்க்யை கட்டி கொடுத்து தாகம் தீர்க்கும் வகையில் சில ஏற்பாடுகளை செய்துள்ளதற்கு, அந்த ஊர் மக்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை ரஜினிகாந்த் தங்களுடைய ஊருக்கு வந்ததில்லை என்கிற குறை ஒன்று மட்டுமே தங்கள் மனதில் உள்ளதாகவும், அவர் விரைவில் தங்களைப் பார்க்க வர வேண்டும் என கோரிக்கை ஒன்றியும் வைத்துள்ளனர்.