நடிகை சாய் பல்லவி ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இரண்டு தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுடன் நடிகை சாய் பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்துகொண்டுள்ளார்.
24
இந்த பதிவில், "இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்காது!. ஒரே வருடத்தின் இரண்டு படங்களுக்காக பாராட்டுகளை பெற்றுள்ளேன், இந்த கதாபாத்திரங்களுக்காக நான் பெற்ற அபரிமிதமான அன்பிற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். மேலும் இதுபோன்ற அழகான பாத்திரங்களை பெற்றதற்கு நான் ஆசீர்வதிக்க பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'லவ் ஸ்டோரி', மற்றும் 'ஷியாம் சிங்கராய்' ஆகிய இரண்டு படங்களுக்கும், சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றுள்ளார்.
44
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் நடித்த பிரேமம் படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, சாய் பல்லவியின் மலர் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் ஃபிடா, மாரி 2, போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.