தென்னிந்திய திரையுலகில் மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகைகளில் ஒருவராக இருந்து பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சினேகா இன்று தன்னுடைய 41 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
குறிப்பாக தமிழ் மொழியில், 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சினேகா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, போன்ற பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
அந்த வகையில், தனுஷுக்கு ஜோடியாக 'பட்டாஸ்' படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே... இரண்டாவது முறையாக கர்ப்பமானார். மகள் பிறந்த பிறந்தார், திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டாலும், விளம்பரங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.