பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் பட சாதனையை நெருங்கும் பொன்னியின் செல்வன்... ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவித்த லைகா

Published : Oct 12, 2022, 03:02 PM IST

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தை ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் படம் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

PREV
14
பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் பட சாதனையை நெருங்கும் பொன்னியின் செல்வன்... ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவித்த லைகா

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, அடிப்படையாக வைத்து அதேபெயரில் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். மொத்தம் 5 பாகங்களை சுருக்கி இரண்டு பாகங்களை கொண்ட படமாக எடுத்துள்ளனர். இதனை சாத்தியமாக்கியதற்கு முக்கிய காரணம் இளங்கோ குமரவேல். அவர் இதற்கு முன்னர் நான்கரை மணிநேரத்தில் பொன்னியின் செல்வன் கதையை நாடகமாக போட்டுள்ளார். அவரின் உதவியுடன் தான் தற்போது மணிரத்னம் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார்.

24

இப்படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷா, ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... வாடகை தாய் சர்ச்சைக்கு மத்தியில்... விக்கி - நயனை வாழ்த்தி சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய பொன்னியின் செல்வன் நடிகர்

34

இதுதவிர இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், கலைக்கு தோட்டா தரணி, ஒளிப்பதிவுக்கு ரவிவர்மன், படத்தொகுப்புக்கு ஸ்ரீகர் பிரசாத் என அனுபவமிக்க டெக்னிக்கல் டீம் பணியாற்றி இருந்த இப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. ரிலீசாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆக உள்ள நிலையிலும், பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

44

அந்த வகையில் இந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது கமல்ஹாசனின் விக்ரம் தான். அப்படத்தின் சாதனையையும் விரைவில் பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை ரூ. 414.87 கோடி வசூலித்துள்ள இப்படத்தை ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவித்துள்ளது இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம். அதேபோல் வெளிநாட்டிலும் இப்படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்னும் சில தினங்களில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை பொன்னியின் செல்வன் படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஸ்கூல் படிக்கும்போதே சொந்தமாக கார் வாங்கி கலக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார் - குவியும் வாழ்த்துக்கள்

Read more Photos on
click me!

Recommended Stories