ஸ்கூல் படிக்கும்போதே சொந்தமாக கார் வாங்கி கலக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார் - குவியும் வாழ்த்துக்கள்

First Published | Oct 12, 2022, 1:22 PM IST

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் பூவையார், தற்போது சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஏராளமான பாடகர்கள் உருவாகி இன்று தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பூவையார். கானா பாடல்கள் பாடுவதில் கில்லாடியான இவர், அந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார்.

அந்நிகழ்ச்சியின் போது மாகாபா உடன் இவர் அடிக்கும் லூட்டி மக்களை மிகவும் கவரும் வகையில் இருந்தது. அதேபோல் இவருக்கு கப்பீஸ் என பெயர் வைத்தார் மாகாபா. அதிலிருந்து இவரை அனைவரும் செல்லமாக கப்பீஸ் பூவையார் என்று தான் அழைத்து வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, பூவையாருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... லூசு மாதிரி கேள்வி கேட்காதனு எகிறிய மகேஸ்வரி.. பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வெடித்த சண்டை - வைரல் புரோமோ இதோ

Tap to resize

அந்நிகழ்ச்சியின் போது, அதில் நடுவர்களில் ஒருவரான பாடகர் சங்கர் மகாதேவன், நீ சினிமாவில் நடிகனாக கலக்குவடா என ஒரு எபிசோடில் சொல்லி இருப்பார். அவர் சொன்னது போலவே இவருக்கு பாடல் பாட கிடைக்கும் வாய்ப்பை விட சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைத்துள்ளது. இவர் இதுவரை நடிகர் விஜய் உடனே பிகில், மாஸ்டர் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்துவிட்டார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் பூவையார். இதுதவிர பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகி வைரல் ஹிட்டான வெறித்தனம் பாடலை நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பாடி அசத்தி இருந்தார் கப்பீஸ் பூவையார். 

இவ்வாறு சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் பூவையார், தற்போது சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த கார் முன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “மக்களே எங்களோட புதிய கார், நீங்கள் இல்லயே நான் இல்லை. உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும். அனைவருக்கும் நன்றி, கடவுளுக்கும் நன்றி. எல்லாம் புகழும் ஆண்டவனுக்கு” என பதிவிட்டுள்ளார். ஸ்கூல் படிக்கும்போதே சொந்தமாக கார் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ள பூவையாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... குடும்ப பிரச்சனை குறித்து விஜய் ஆண்டனி போட்ட டுவிட்... குழம்பிப்போன ரசிகர்கள் - ஒருவேளை அதுவா இருக்குமோ..!

Latest Videos

click me!