பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்த காவ்யா... அடுத்த முல்லை யார் தெரியுமா?

First Published | Oct 12, 2022, 9:16 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதை காவ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அடுத்த முல்லை யார் என்கிற அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக மக்கள் மத்தியில் பேமஸ் ஆன சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. 4 அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதையம்சத்துடன் கூடிய இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு தொடங்கிய சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. அதற்கு முக்கிய காரணம் இதில் முல்லையாக நடித்த விஜே சித்ரா தான். 

இதில் அவர் குமரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்கள் இருவர் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களை மட்டுமல்லாது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தவர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணம் அந்த சீரியலுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tap to resize

இதையடுத்து முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் தான் காவ்யா அறிவுமணி. போகப்போக காவ்யா - குமரன் ஜோடிக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காவ்யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதுகுறித்து அவர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் காவ்யா. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த கடைசி நாள் கடந்த மாதம் 14-ந் தேதி என்றும் இந்த அழகான பயணத்திற்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அவர் எதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார் என்கிற காரணத்தை வெளியிடவில்லை. 

காவ்யா விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து பிரபலமான லாவண்யா என்பவர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த முல்லையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு குழந்தைகள் மூலம் ஜாக்பாட் அடிக்கும்..! பிரபல ஜோதிடரின் துல்லிய கணிப்பு..!

Latest Videos

click me!