விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் தொடர் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் ராஜூ ஜெயமோகன். கனா காணும் காலங்கள் இரண்டாம் சீசனில் இவர் நடித்திருந்தார். அதே ஆண்டு விஜயின் நண்பன் படத்தில் ஒப்பந்தமாகி பின்னர் அந்த வாய்ப்பை இழந்திருக்கிறார் ராஜூ.
இதைத்தொடர்ந்து மற்றுமொரு பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நாயகனுக்கு நண்பனாக தோன்றியிருந்தார். பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நாயகனின் தோழனாக தோன்றி சின்னத்திரை ரசிகர்களில் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார் ராஜூ. இவரது நகைசுவை திறன் பலருக்கும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது.