பாலியல் துன்புறுத்தல் புகார்... அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேத்துங்க - மகளிர் ஆணையம் கடிதம்

First Published | Oct 11, 2022, 11:44 AM IST

10-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி மீடூ புகாரில் சிக்கிய ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ரியாலிட்டி ஷோவான இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முதன்முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் நடத்தப்பட்டது இந்தி மொழியில் தான். அங்கு தற்போது 16 சீசன் நடைபெற்று வருகிறது. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவ்வாறு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திரைப்பட இயக்குனர் சஜித் கான் என்பவரும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வலியுறுத்தியில் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்... பிகினி உடையில் கவர்ச்சி அலப்பறை... மாலத்தீவில் மஜா பண்ணும் ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

Tap to resize

ஏனெனில் இயக்குனர் சஜித் கான், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர் ஆவார். அவர்மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே மீடூ புகாரும் கொடுத்துள்ளனர். அப்படி ஒரு கேவலமான மனநிலை படைத்த ஒருவருக்கு எப்படி பிக்பாஸில் இடம்கொடுக்கப்பட்டது என ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.

சஜித் கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றக்கோரி புகார் அளித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதிக்கு சோசியல் மீடியாவில் ஆதரவுக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தை சல்மான் கானும், பிக்பாஸ் குழுவினரும் எப்படி கையாள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  வசூலில் கடும் சரிவை சந்தித்த பொன்னியின் செல்வன்... விக்ரம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா?

Latest Videos

click me!