பிகினி உடையில் கவர்ச்சி அலப்பறை... மாலத்தீவில் மஜா பண்ணும் ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
Rashmika Mandanna : மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அங்கு எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். குறிப்பாக விஜய் தேவரகொண்டாவுக்கு இவர் ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு இவர்களிடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுவையும் பரப்பியது.
இருப்பினும் விஜய் தேவரகொண்டாவை காதலிக்கவில்லை என்றும் தாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக ராஷ்மிகா விளக்கம் அளித்தாலும், அவர்கள் இடையேயான காதல் சர்ச்சை இன்றளவும் குறைந்த பாடில்லை. சமீபத்தில் கூட இருவரும் ஜோடியாக மாலத்தீவு சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் நடிகை ராஷ்மிகா அங்கிருந்து சோலோவாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்... டாஸ்க்கில் டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்.. ஜிபி முத்துவை அலேக்காக தூக்கிக்கொண்டு ஓடிய ஹவுஸ்மேட்ஸ்- புரோமோ வீடியோ இதோ
இருப்பினும் அவரை விடாது ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள், மாலத்தீவில் அவர் அணிந்திருக்கும் கண்ணாடி விஜய் தேவரகொண்டாவுடையது என்பதை கண்டுபிடித்து, ‘மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டியே மா’ என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ராஷ்மிகா, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளே போட்டிருக்கும் கருப்பு நிற பிகினி உடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிந்து வருகின்றன. நடிகை ராஷ்மிகா தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வசூலில் கடும் சரிவை சந்தித்த பொன்னியின் செல்வன்... விக்ரம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா?