Asianet News TamilAsianet News Tamil

டாஸ்க்கில் டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்.. ஜிபி முத்துவை அலேக்காக தூக்கிக்கொண்டு ஓடிய ஹவுஸ்மேட்ஸ்- புரோமோ வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது நாள் புரோமோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீடு கிளப் ஹவுஸ் ஆக மாறியது. அதன்படி கிச்சன், பாத்ரூம், கிளீனிங், பாத்திரம் கழுவும் அணி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டது.

அந்த நான்கு அணிகளும் தங்களது திறமையை நிரூபித்து எந்த அணி சிறந்தது என நிரூபிக்க வேண்டும் என இன்று ஒரு டுவிஸ்டை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி போட்டியாளர்கள் என்ன கேட்டாலும் மற்ற அணியினர் அதனை செய்ய வேண்டும். உதாரணத்துக்கு கிளீனிங் அணியில் உள்ளவர் கிச்சன் அணியில் உள்ள ஒருவரை அழைத்து தனக்கு ஊட்டி விட சொல்லலாம். இதில் பாத்ரூம் வருது என ஜிபி முத்து சொன்னதும் சம்மந்தப்பட்ட அணியை சேர்ந்தவர்கள் அவரை அலேக்காக தூக்கிக் கொண்டு செல்லும் காட்சியும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... ஜிபி முத்து கேட்ட ஒரே ஒரு கேள்வியால் வாயடைத்துப் போன கமல்ஹாசன் - தீயாய் பரவும் வீடியோ இதோ

Video Top Stories