சினிமாவில் நடிக்க மறுத்ததேன்..மனம் திறந்த பிக்பாஸ் 6 ரக்ஷிதா மகாலட்சுமி

First Published | Oct 10, 2022, 12:28 PM IST
  •  சீரியலில் நடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி சினிமாவில் கிடைப்பதில்லை எனக்கூறியுள்ளார் நடிகை ரஷிதா மகாலட்சுமி.
Bb tamil 6

ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த பிக் பாஸ் சீசன் 6 திருவிழா தற்போது துவங்கிவிட்டது. நேற்று மாலை கோலாகல கொண்டாட்டத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கமலின் கலகலப்பான பேச்சுடன் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் குறித்த சுவாரசியங்களையும் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ரஷிதா மகாலட்சுமி தனது வாழ்க்கை குறித்தும், தான் ஏன் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டேன் என்பது குறித்தும் கூறியுள்ளதை தற்போது பார்க்கலாம்.

Bb tamil 6

பிக்பாஸ் சீசன் 6 நேற்று தொடங்கியுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவராக சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மாகாலட்சுமியும் சென்றுள்ளார்.  தான் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முடிவெடுத்தேன் என கூறிய அவர், எனக்கு தேடல் ஒன்று இருந்தது. என்னை நானே புரிந்துக் கொள்வதற்கு பிக்பாஸ் வீடு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார். 


Bb tamil 6

மேலும் அவர், தேவை இருந்தால் எதை வேண்டுமானாலும் நம்மால் செய்துவிட முடியும். எதையும் கற்றுக்கொள்ள முடியும். என்னை பற்றி இணையத்தில் வரும் ட்ரொல்களை வைத்துதான் நான் சரியான பாதையில் செல்கிறேனா என பாடம் கற்கிறேன். என்னை விமர்சிப்பவர்கள்தான் எனக்கு வழி காட்டுகிறார்கள் என கூறினார். 

Bb tamil 6

தனக்கு சினிமா வாய்ப்புகள் வந்தும் அவற்றில் நடிக்க மறுப்பதற்கு காரணம், சீரியலில் நடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அதில் கிடைப்பதில்லை எனக்கூறியுள்ளார்  நடிகை ரஷிதா மகாலட்சுமி.

Latest Videos

click me!