பிக்பாஸ் 6-ல் மேலும் ஒரு போட்டியாளர்... முதல் வாரமே சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுக்க உள்ள பிரபல நடிகை

First Published | Oct 10, 2022, 11:14 AM IST

பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்துகொள்ளாததால் அவருக்கும், பிக்பாஸ் குழுவினருக்கும் ஏதேனும் பிரச்சனையா என்றெல்லாம் கேள்விகள் எழத்தொடங்கின. 

வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவு முதல் நாளே 20 போடியாளர்களை களமிறக்கி உள்ளார் பிக்பாஸ். இதில் 10 பெண்கள், 9 ஆண்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்தம் 20 பேர் பங்கேற்று உள்ளனர். நேற்றைய அறிமுக எபிசோடு கலகலப்போடு நிறைவடைந்தது.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ராபர்ட், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, விஜே கதிரவன், சின்னத்திரை நடிகர் அசீம், சின்னத்திரை நடிகைகள் ரச்சிதா, ஆயிஷா, சாந்தி, தொகுப்பாளினி மகேஸ்வரி, ஜனனி, மாடல் அழகிகளான குவின்ஸி, ஷெரினா மற்றும் திருநங்கை ஷிவின் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சி தொடங்கும் முன் வியூகங்கள் அடிப்படையில் ஏராளமான பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன. அதில் பெரும்பாலானவர்களின் உத்தேச பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர் என்றால் அது நடிகை மைனா நந்தினியின் பெயர் தான். ஆனால் அவர் நேற்று நடைபெற்ற பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்... இனி அதிரடி... சரவெடி தான்! பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைந்துள்ள மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் மற்றும் புகைப்படம்!

இதையடுத்து, மைனா நந்தினிக்கும் பிக்பாஸ் குழுவினருக்கும் ஏதேனும் பிரச்சனையா என்றெல்லாம் கேள்விகள் எழத்தொடங்கின. ஆனால் உண்மை என்னவென்றால், மைனா நந்தினியை சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாம் பிக்பாஸ் குழு. இதன் காரணமாகத் தான் அவர் பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையாம்.

மைனா நந்தினி இன்னும் ஒரு சில நாட்களில் சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நடிகையும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா இவ்வாறு தான் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஜிபி முத்து... ஸ்டிரிக்ட் ஆன கண்டிஷன் போட்டு வீட்டுக்குள் அனுப்பிய கமல்

Latest Videos

click me!