ஒருவருடத்தில் கலைந்த திருமண வாழ்க்கை...பிபி 6 விஜே மகேஸ்வரியின் உருக்கமான பதிவு 

First Published | Oct 10, 2022, 11:31 AM IST

கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாமல் தவித்தேன். என் மகனின் படிப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அதனால் தான் இங்கு வந்தேன் என கூறியுள்ளார்.

Bb tamil 6

பிக் பாஸ் 6 கோலாகலமாக துவங்கிவிட்டது. நேற்று மாலை துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள விஜே மகேஸ்வரி தனது திருமண வாழ்க்கை குறித்து பேசி இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள மகேஸ்வரி தன்னைப் பற்றி தெரிவிக்கையில், அவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் குறித்து கூறினார்.

Bb tamil 6

என் அப்பாவுக்கும்  என்னை பிடிக்காது என்பதால், என்னையும் அக்காவையும் விட்டு சென்றுவிட்டார். நிறைய பாரங்களை கடந்து 15 வயதிலேயே என் பயணத்தை தொடங்கிவிட்டேன். பெரிய கனவுடன் திருமண வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால் அந்த கனவும் ஒரு வருடத்திலேயே கழிந்து விட்டது. இருந்தும் அந்த திருமணத்தின் காரணமாக எனக்கு கிடைத்த பரிசு தான் என் மகன். எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை நான் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாமல் தவித்தேன். என் மகனின் படிப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அதனால் தான் இங்கு வந்தேன் என கூறியுள்ளார்.


Bb tamil 6

விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன், புதுக்கவிதை உள்ளிட்ட சீரியல்களிலும், இசையருவி, சன் டிவி சன் நியூஸ் உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளராகவும், சமீபத்தில் உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bb tamil 6

நேற்று துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் நூறு நாட்களுக்கு நடைபெறும். அந்த சவால்களை எல்லாம் கடந்து யார் ரசிகர்களின் மனதை வெல்கிறார்களோ! அவர்களே பிக் பாஸ் வீட்டின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதோடு இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு சம்பளமும் உறுதி செய்யப்பட்டு இருக்கும். இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest Videos

click me!