தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. சக்சஸ்புல் இசையமைப்பாளராக வலம் வந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதன்பின்னர் சலீம், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான், யமன், காளி, திமிரு புடிச்சவன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பிச்சைக்காரன் தான். சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது.
இதையும் படியுங்கள்... ஹிஜாப்புக்கு எதிர்ப்பு... ஆடைகளை கழற்றி வீசி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட நடிகை
தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதோடு, அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. இவ்வாறு பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் விஜய் ஆண்டனி, டுவிட்டரில் குடும்ப பிரச்சனை குறித்து பதிவிட்ட பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
அதில், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல, விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள், ஒருவேளை விஜய் ஆண்டனி வீட்ல ஏதாச்சும் பிரச்சனையா இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ அது உண்மை என நினைத்து அவருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர். ஆனால் உண்மையில் விஜய் ஆண்டனி எதற்காக இப்படி ஒரு டுவிட்டை போட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இதையும் படியுங்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்த காவ்யா... அடுத்த முல்லை யார் தெரியுமா?