ஒட்டு மொத்த திரையுலகினர் மத்தியிலும், மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று, நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆன நான்கே மாதத்தில் குழந்தை பிறந்துள்ள தகவல் தான்.
வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி 5 வருடத்திற்கு பின்னர், கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பெற்று கொள்வதில் பிரச்சனை இருக்கும் பக்கத்தில் தான், வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சில விதிமுறைகளும் உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுக்கு வாடகை தாயாக இருந்தவர் யார்? என்கிற தகவல் கசிந்துள்ளது.