கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!

Published : Jul 07, 2022, 10:27 PM ISTUpdated : Jul 07, 2022, 11:18 PM IST

நடிகை மீனாவின் கணவர், வித்யாசாகர் உயிரிழந்து ஒரு வாரமே ஆகும் நிலையில் மீனா குறித்து பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
14
கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!
Actress Meena

தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர்கள் அனைவருமே முன்னணி நடிகையாக ஜொலிப்பது இல்லை.  ஒரு சிலர் மட்டுமே அனைவராலும் ரசிக்கப்படும் கதாநாயகியாக மாறுகிறார்கள் அந்த பட்டியலில் இடம்பிடித்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மீனா, வித்யாசாகர் என்பவரை பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார்.
 

24
Meena Vidyasagar

இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில வருடங்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்படவே அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து, கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார்.

மேலும் செய்திகள்: கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!
 

34
Meena husband death

மீனாவின் கணவர் உடலுக்கு  பல பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலிக்கு செலுத்தினர். மேலும் மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள், மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். இப்படி இருக்க தற்போது மீனா பற்றி சமூக வலைதளத்தில் தீயாக சில வதந்திகள் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
 

44
Rumour on Meena husband death

மீனாவின் கணவர் இறந்து ஒரு வாரமே ஆகி உள்ள நிலையில், மீனா மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக கூறி... கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட இவருடைய பழைய விளம்பர படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிலர் சமூக வலைதளத்தில் பரப்பினர். ஆனால் இது உண்மையில், இரண்டு மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இதனை மீனாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே மீனா எவ்வித வதந்திகளையும் பரப்பாதீர்கள் என, சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டு தெரிவித்த போதிலும் சிலர் இப்படி நடந்து கொள்வது அதிருப்திர்யை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!
 

Read more Photos on
click me!

Recommended Stories