நயன், த்ரிஷாவைவிட ரொம்ப பிஸி... செம டிமாண்ட் உள்ள டாப் 3 ஹீரோயின்கள் யார்... யார் தெரியுமா?

Published : Aug 18, 2026, 07:46 AM IST

Top 3 Busiest Actresses : நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளுக்கு அதிகளவில் பட வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி தற்போது தென்னிந்தியாவில் செம பிசியாக நடித்து வரும் 3 ஹீரோயின்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
14
டாப் 3 ட்ரெண்டிங் நடிகைகள்

சினிமாவில் சில நடிகைகளுக்கு மட்டும் 'ஆல்-ஆக்சஸ் பாஸ்' கிடைச்ச மாதிரி இருக்கு. ஒரே மொழிப் படத்தில் மட்டும் நடிக்காமல், தென்னிந்தியா முழுக்க அவங்க திறமையால கலக்கிட்டு இருக்காங்க. சொந்த மொழியில் வரிசையா படங்கள் பண்றதோட, பக்கத்து மாநில சினிமாக்களிலும் ஒரு ரவுண்டு வராங்க. இப்போதைக்கு ருக்மிணி வசந்த், மமிதா பைஜு, கயாடு லோஹர் ஆகிய 3 பேரும் தென்னிந்தியாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின்களா மாறிட்டு வராங்க. அவர்களின் கைவசம் என்னென்ன படங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Rukmini Vasanth : தங்கப்பூவே!! இதயத்தை திருடும் ருக்மிணி வசந்த் அழகிய கிளிக்ஸ்

24
கலக்கும் ருக்மிணி வசந்த்

ருக்மிணி வசந்த் ஏற்கெனவே தன் கைவசம் யஷ்ஷுடன் 'டாக்சிக்', ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக 'டிராகன்' படங்கள்ல நடிச்சு முடிச்சிருக்காங்க. இப்போ மலையாள சினிமாவுலயும் என்ட்ரி கொடுக்க ரெடியாயிட்டாங்க. நடிகர் நிவின் பாலியின் 51-வது படத்துல ருக்மிணி தான் ஹீரோயின். புதுமுக இயக்குநர் நஷீத் மஹ்மூத் இந்த படத்தை இயக்குறார். நிவின் பாலிக்கு ஜோடியா ருக்மிணி நடிக்கப்போறாங்க. தன்னோட மலையாள என்ட்ரி பத்தி சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்ட ருக்மிணி, 'இது ரொம்ப ஸ்பெஷலான முதல் படம்'னு தன்னோட சந்தோஷத்தை பகிர்ந்துருக்காங்க.

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!

34
மமிதா பைஜுவும் செம பிஸி!

இன்னொரு பக்கம், பிரேமலு என்கிற மலையாளத்தின் மூலம் பாப்புலர் ஆன நடிகை மமிதா பைஜு, தமிழ் சினிமாவிலும் கலக்கிட்டு இருக்காங்க. இப்போதைக்கு தமிழ்ல 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் மூலமா டிரெண்டிங்ல இருக்காங்க. தாய்மொழியான மலையாளத்தில் வரிசையா படங்கள்ல பிஸியா இருக்குற மமிதா, இப்போ தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக காத்துட்டு இருக்காங்க. இதனால மலையாளம், தமிழுக்கு அப்புறம் தெலுங்கிலும் மமிதா கலக்க ரெடியாயிட்டாங்க. தமிழில் அடுத்ததாக ரெண்டு வானம் படம் ரிலீசுக்கு காத்திருக்கு.

Mamitha Baiju : அன்று சூர்யாவைப் பார்க்க முடியாமல் அழுத சிறுமி... இன்று அதே ஹீரோவுக்கு ஜோடி - கனவு நனவான குஷியில் மமிதா

44
கயாடு லோஹருக்கும் டிமாண்ட்!

கயாடு லோஹர் விஷயத்துக்கு வந்தா, அவங்க தென்னிந்தியாவின் பல மொழிகளிலும் தடம் பதிச்சிட்டு வராங்க. தெலுங்குல பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்குற 'பாரடைஸ்' படத்துல நடிக்குற கயாடு, தமிழ்ல 'இம்மார்டல்' மற்றும் 'சூர்யா 48' படங்கள்ல நடிக்கப்போறாங்க. இதுகூடவே, மலையாளத்துல 'தாரம்' மற்றும் துல்கர் சல்மான் கூட 'ஐ அம் கேம்' படங்களிலும் நடிச்சிட்டு இருக்காங்க. இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்துல ரெடியாகிக் கொண்டிருக்கும் மஞ்சனத்தி என்கிற திரைப்படத்திலும் நடிக்கிறாங்க கயாடு.

மொத்தத்துல, ருக்மிணி வசந்த், மமிதா பைஜு, கயாடு லோஹர் - இந்த மூணு ஹீரோயின்களும் தென்னிந்திய சினிமா மேல நடத்துற படையெடுப்போட வேகம் இப்போதைக்கு குறையுற மாதிரி தெரியல. ஒண்ணு பின்னாடி ஒண்ணா புதுப் படங்களை கமிட் பண்ணிட்டு இருக்குற இந்த அழகிகள், வர்ற காலத்துல இன்னும் பல மொழிகள்ல தங்களோட முத்திரையை பதிப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்.

துணிக்கடையில் வேலை பார்த்திருக்கேன்... டிராகன் நாயகி கயாடு லோஹரின் அதிர வைக்கும் கதை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories